பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, “ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது வாழ்க்கையின் நோக்கம், இதற்கு நான் கியாரண்டி என பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

நாடாளுமன்ற தேர்தலின் 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.  இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. இதையொட்டி, இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலம் பகல்பூர் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி,  , “ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனக்கு அரசியல் அல்ல, இது எனது வாழ்க்கையின் நோக்கம், அதை விட்டுவிடமாட்டேன். எந்த சக்தியாலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை தடுக்க முடியாது. காங்கிரஸ் அரசு வந்தவுடன் நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்.  இது எனது உத்தரவாதம் என பொதுமக்களிடம் கூறினார்.

மேலும்,  பிரதமர் நரேந்திர மோடி தனது கோடீஸ்வர நண்பர்களின் ரூ. 16 லட்சம் கோடி மதிப்பிலான கடனைத் தள்ளுபடி செய்ததாகக் குற்றம் சாட்டியவர், இந்த  “குற்றத்தை” நாடு ஒருபோதும் மன்னிக்காது என்றும், இந்த பணம் இந்தியர்களின் வலியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் ‘அதானிகள்’ போன்றவர்களுக்கு ஹைப் உருவாக்குவதற்காக செலவிடப்பட்டது என்றும் விமர்சித்தார்.