புது டெல்லி:
உயர் நீதிமன்றங்கள் பற்றி சொலிசிட்டர் ஜெனரல் வெளியிட்ட அறிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷ்கர் மேத்தா வெளியிட்ட அறிக்கையில், உயர் நீதிமன்றங்கள், அரசுக்கு இணையாக செயல்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் கபில் சிபல், இந்த கருத்து நீதிமன்றங்களின் செயல்பாட்டை அவமதிப்பது போன்ற அர்த்ததில் தெரிவிக்கப்பட்டதா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு ஆவணப் போக்குடன் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கபில் சிபல், உயர் நீதிமன்றம் குறித்த சொலிசிட்டர் ஜெனரலின் கருத்து நீதிமன்றங்களின் கருத்தை அவமதிப்பது போன்ற அர்த்தத்தில் உள்ளது. அரசின் ஆணவப் போக்கை நீதிமன்றம் கடைபிடிப்பது முறையல்ல என்றும் கூறினார்.
இதற்கு முன்பு இதே ஆணவப் போக்கை அரசு வெளிப்படுத்தியுள்ளது என்று கூறிய கபில் சிபல், அரசினை போலவே ஆணவ போக்குடன் நீதிமன்றம் நீதி வழங்குவது சரியாக இருக்காது. அரசு இதே போன்ற ஆவண போக்கை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது என்பது நீதிமன்றங்களும், அரசுகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நீதிமன்றங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறதா என்றால், தற்போது என்ன நடந்து வருகிறது என்றே தெரியவில்லை. இதுபோன்ற கருத்தின் வெளிப்பாடு, ஜனநாயக் சூழலுகு உகந்தது அல்ல என்றும் அவர் தெரிவித்தார். இதுமட்டுமின்றி அரசு , பத்திரிக்கையாளர்களை கழுகு என்று குறிப்பிட்டு பேசியுள்ளது. இதுபோன்று அரசு பேசும் போது கலாச்சாரத்தை மறந்து விட்டது என்றே நினைக்கிறேன். பத்திரிக்கையாளரை தவறாக குறிப்பிட அரசு நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர்கள், நாட்டில் நிலவும் தீய சூழலை சுத்தம் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றி வருகின்றனர். கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது ஒன்றும் திரும்புமுனையான தருணம் அல்ல என்று கூறிய அவர், ஊரடங்கு மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது. மேலும், அரசு எதிர்க்கட்சிகளுடனான மோதலை கைவிட்டு கொரோனா பரவலை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கபில் சிபல் வலியுறுத்தினார்
அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான சமூக இடைவெளி மிகவும் அதிகரித்து விட்டது. உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இந்த பிரச்சினையை மக்களிடம், குறிப்பாக ஏழை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்பது அரசுக்கு தெரியவில்லை என்றும் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
எதிர்கால வரலாற்றுப் புத்தகத்தை படிப்பவர்கள், இந்த அரசு அழிவின் முன்னோடியாக செயல்பட்டதை அறிந்து கொள்வார்கள் என்றும், ஜனநாயகத்தை பாதுகாப்பதாக கூறி பிரதமர், மார்ச் 24-ஆம் தேதி ஜனநாயகத்தை சாகடித்து விட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்படுகிறதா? என்றும் கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.
கொரோனா பரவலை தடுக்க முயற்சியில் அரசு தோல்வியடைந்து விட்டது என்றும், இந்த சவாலை நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து எதிர்க் கொண்டதால் மட்டுமே கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கபில் சிபில் கூறினார்.
இந்திய மக்களை பொருத்தவரை உங்கள் வரையறை என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்று நான் பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன். ஊரடங்கை அமல் படுத்துவதற்கு முன்பு என்ன நடந்தது என்பதையும், இந்திய மக்களின் எதிர்காலத்தை எப்படி பிரதமர் கையாள போகிறார் என்பதையும் விளக்க வேண்டும் என்றும் கபில் சிபல் கேட்டு கொண்டார்.