டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

சமீபத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலத்தின்படி) புதிய தேர்தல் ஆணையரை (EC) நியமிப்பதைத் தடை செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அலுவலகம்) சட்டம், 2023 (சட்டம்).

நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் 3வது வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு, தேர்தல் ஆணையராக இருந்த அருண்கோயல் திடீரென பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தேர்தல் ஆணையரின் ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக் கொண்டு அவரை விடுவித்தது  சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், வரும் 15ந்தேதி புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் இரண்டு புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,

இந்த நிலையில், புதிதாக தேர்தல் ஆணையர்களை  புதிய சட்டத்தின் கீழ்  தேர்ந்தெடுத்து  நியமிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்க  தொடரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறும் நிலையில், கடந்தாண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரை குழுவில் சேர்த்திருந்தது.

இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் சூழலில் அரசியல் சார்பற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறும் குழுவே தேர்தல் ஆணையரை நியமிக்க உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜனவரியில் இதுபோன்ற  ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கோபால் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,   புதியதேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான சட்டம் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதாகவும், இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,. தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் மத்தியஅரசின் மசோதாவுக்கு  தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது. இ த நிலையில்,  தற்போது மீண்டும்  ஒரு வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

ந்திய தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விலக்கி மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை டிசம்பர் 2023ல் நிறைவேற்றியது.

முன்னதாக, கடந்த ஆண்டு (2023)  மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “பிரதமர், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்” என்று கூறியிருந்தது. ஆனால், இதில் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சர் ஒருவரை  சேர்த்து, புதிய சட்டடம் கொண்டு வரப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி வரையறை மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023 தொடர்பாக 2023 டிசம்பர் 28-ம் தேதி  அரசாணை  வெளியிடப்பட்டது. அதன்படி, தேர்வு குழு என்பது 2 மத்திய அமைச்சர்கள், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் என 5 பேர் இருப்பார்கள். இந்த குழுவுக்கு பிரதமர்தான் தலைமை. இந்த குழு 5 பேரில் ஒருவரை தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும். இப்படியாக தேர்வு செய்யப்படும் நபர்தான் தேர்தல் ஆணையராகவும், தலைமை தேர்தல் ஆணையராகவும் நியமிக்கப்படுவார்கள்.

மத்தியஅரசின் இந்த அறிவிப்பை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.