டெல்லி: காங்கிரஸ் கட்சி அடிப்படை ரீதியாகவே பலவீனம் அடைந்துள்ளது என்பதை பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் தெரிவித்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கட்சியின் தலைமை மீது விமர்சனம் செய்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி தோல்வியை சந்தித்தது. 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 19 இடங்களை மட்டுமே வென்றது. இது காங்கிரஸ் தலைமைமீது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் ஒருவரே ராகுல்காந்தி மீது விமர்சனம் செய்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிலும், கட்சியின் தலைமைமீது மீண்டும் விமர்சனத்தை எழுப்பினார்.

இந்த நிலையில், டைனிக் பாஸ்கர் ( Dainik Bhaskar) என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் தலைமையை விமர்சித்துள்ளார்.

 பீகாரில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து நாம் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு 70 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டதே தவறு. அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி முடிவுகளை எடுத்திருக்க வேண்டும்.

பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கும் நல்ல வாய்ப்பு இருந்தது. வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை சந்தித்து இருக்கிறோம்.  அங்கு, பாரதிய ஜனதா கட்சி, கூட்டணி கட்சியிடம் இருந்து  20 ஆண்டுகளாக வெற்றி பெற்ற தொகுதி பெற்று அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. அந்த தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ராஷ்டிரிய ஜனதாதளம் ஒதுக்கி உள்ளது. இதை  கட்சித் தலைமை ஏற்றிருக்கக் கூடாது.  மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் நிலைமையை கருத்தில்கொண்டு அதிகபட்சமாக  45 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு இருக்க வேண்டும். 70 தொகுதிகளை கேட்டுப்பெற்று, அவை அனைத்திலும் போட்டியிட்டது தவறு.

“பீகாரில், ஆர்ஜேடி-காங்கிரஸ் வெற்றிபெற ஒரு வாய்ப்பு இருந்தது.  வெற்றிக்கு இவ்வளவு நெருக்கமாக இருந்தபோதிலும் நாங்கள் ஏன் தோற்றோம் என்பது விரிவான மறுஆய்வு தேவை. வெகு காலத்திற்கு முன்பு காங்கிரஸ் ராஜஸ்தான், எம்.பி., சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டை வென்றது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

அதுபோல நடைபெற்று முடிந்த  குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும் வலுவான பிரச்சார புள்ளிகளைக் கொடுத்தாலும் காங்கிரஸின் பின்னடைவுகள் சந்தித்துள்ளது. இது எல்லா மாநிலங்களிலும் கட்சி அடிப்படை ரீதியாக பலவீனமாக இருப்பதை காட்டுகிறது.

விரைவில் நடைபெற உள்ள கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் நடைபெறவிருக்கும்  சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் முடிவுகள் என்ன என்பதை பார்ப்போம் என்று கூறியவர், பாஜக தலைமையிலான கூட்டணியை வெல்ல, காங்கிரஸ் கட்சி அடித்தளத்தை பலப்படுத்த வேண்டும் என்றார்.

ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராவாரா  என்ற  கேள்விக்கு பதில் அளித்த ப.சிதம்பரம்,  “அகில இந்திய காங்கிரஸ்  கட்சிக்கு யார் தலைவராக  தேர்வு செய்யப்படுவார் என்று என்னால் கூற முடியாது. கட்சியின் தலைவருக்கான தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்” என்றார்.

கட்சியில் தேர்தல் நடத்தாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் நிலை….? குலாம்நபி ஆசாத்…