கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
200 யூனிட் இலவச மின்சாரம், 10 கிலோ இலவச அரிசி, குடும்பத்தலைவிக்கு மாதம் தோறும் ரூ. 2000, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ. 3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ. 1500 உதவித்தொகை ஆகிய முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.
மக்கள் நல திட்டங்களை இலவசம் என்றும் இலவசங்களை இனிமேல் அனுமதிக்கப்போவதில்லை என்றும் பேசி வந்த பாஜக கர்நாடக மக்களுக்கு ஏராளமான இலவச வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி ஏற்கும் முதல் நாளே இந்த முக்கிய ஐந்து திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.