சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்க காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

அதில், மதுவிலக்கு, ஆணவப்படுகொலை தடுப்பு, நீட் ரத்து, வேளாண் பாதுகாப்பு மசோதா உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அறிவிக்கப்படாத நிலையில், தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையில் 27  தலைப்புகளின் கீழ் வாக்குறுதிகள்  வழங்கப்பட்டுள்ளன.

அதில், மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி கடற்கரை மற்றும் உள்நாட்டு மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்  என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,  இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் – முதியோர் ஓய்வூதியம் உயர்த்தப்படும்இ,

மாதம் ஒருமுறை மின்கணக்கீடு – சிறு, குறு தொழில்முனைவோருக்கு வங்கிக் கடன் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன