சென்னை
தமிழகத்துக்கான தேர்தல் குழ்வை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது
விரைவில் நாடெங்கும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றன. அதன்படி இன்று தமிழகத்துகான 31 உறுபினர்களைக் கொண்ட தேர்தல் குழுவைக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தேர்வு குழுவில், ப.சிதம்பரம் , செல்வ பெருந்தகை , தங்கபாலு , ஈவிகேஎஸ் இளங்கோவன் , திருநாவுக்கரசர் ,ஜோதிமணி ,கார்த்தி சிதம்பரம் விஜய் வசந்த் பீட்டர் அல்போன்ஸ் ,சுதர்சன் நாச்சியப்பன் , செல்லகுமார் , மாணிக்கம் தாகூர் உட்பட 31 பேர் இடம் பெற்றுள்ளனர்.