டில்லி:

ன்னாவ் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி கு விவகாரம் இன்று மக்களவையில் எதிரொலித்தது. இது குறித்து விவாதிக்க வேண்டும்  மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதையடுத்து, காங்கிரஸ், திமுக உள்பட  எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த உன்னாவ் பகுதியை சேர்ந்த சிறுமி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் மற்றும் சிலர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கில் எம்.எல்.ஏ. சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மீது லாரி ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தி யது. இதில், அந்த பெண் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் தப்பிய நிலையில், மேலும் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து, பாதிக்கப்பட்ட  பெண்ணை கொல்ல நடந்த சதி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று, பாராளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகள் பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டன.

காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பேசினார். மேலும் திமுக உள்பட அனைத்து எதிர்க்கட்சியினரும் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால், இதுகுறித்து பதில் அளிக்காமல், உள்துறை அமைச்சர் அமித்ஷா மவுனம் சாதித்தார். இதன் காரணமாக, அமித்ஷாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து,  காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கு என்று   கோஷமிட்டவாறே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.