மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 5% இடஒதுக்கீடு! காங்கிரஸ் வலியுறுத்தல்

Must read

 மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க, மாநில அரசிடம்  காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவரும்,  வருவாய்த்துறை அமைச்சருமான பாலசாஹெப் தொரட் தெரிவித்து உள்ளார்.

மேலும், இட ஒதுக்கீடு தொடர்பாக தற்போது வரை கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தவில்லை என்றும். அரசில் இடம்பெற்றுள்ள பிற கூட்டணிக் கட்சியினருடன் இது தொடர்பாக விவாதித்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் பாலசாஹேப் தொரட் தெரிவித்தார்.

இசுலாமியர் இட ஒதுக்கீடு தொடர்பாக தற்போது வரை முதல்வர் தாக்கரேவிடம் பேச்சுவார்த்தை நிகழ்த்தவில்லை என்றும் வருவாய்த்துறை அமைச்சர் பாலசாஹெப் தொரட் தெரிவித்தார்.

காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசு கடந்த காலங்களில் இசுலாமியர்க்கு இட ஒதுக்கீடு அளித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அத்திட்டம் நடைமுறையில் இல்லை.

காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இந்த திட்டம் குறிப்பிடப்பட்டி ருக்கிறது, ஆகையால், தேசியவாத காங்கிரசு மற்றும் மாநில அரசுடன் கலந்தாலோசித்து இக்கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுவோம்.  இது தொடர்பாக எவ்விதப் பேச்சுவார்த்தையும் தற்போது வரை நடைபெறவில்லை என்பதே உண்மை, எனத் தோரட் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக, மகாராஷ்ட்ர கூட்டுக் குழுவான விகாஷ் அகாதி (சிவசேனா, தேசியவாத காங்கிரசு, காங்கிரசு) மற்றும் அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்றார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக், மாநில அரசு இசுலாமியர்க்கு கல்வியில் 5 சதவீத ஒதுக்கீடு அளிக்க முன்வர வேண்டுமென மேலவையில் கோரிக்கை விடுத்த சில நாட்களில், தாக்கரே  “இசுலாமியர்க்கான இட ஒதுக்கீடு தொடர்பாக எவ்விதக் கோரிக்கையும் மகாராஷ்ட்ர அரசிடம் முன்வைக்கப்படவில்லை” என தம் கருத்தை வெளியிட்டார்.

இசுலாமியர் இட ஒதுக்கீடு தொடர்பாக தற்போது வரை முதல்வர் தாக்கரேவிடம் பேச்சுவார்த்தை நிகழ்த்தவில்லை என்றும் வருவாய்த்துறை அமைச்சர் பாலசாஹெப் தொரட் தெரிவித்தார்.

காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசு கடந்த காலங்களில் இசுலாமியர்க்கு இட ஒதுக்கீடு அளித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அத்திட்டம் நடைமுறையில் இல்லை.

காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இந்த திட்டம் குறிப்பிடப்பட்டிருக்கிறது, ஆகையால், தேசியவாத காங்கிரசு மற்றும் மாநில அரசுடன் கலந்தாலோசித்து இக்கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுவோம் என தோரட் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பாக எவ்விதப் பேச்சுவார்த்தையும் தற்போது வரை நடைபெறவில்லை என்பதே உண்மை, எனத் தோரட் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக, மகாராஷ்ட்ர கூட்டுக் குழுவான விகாஷ் அகாதி (சிவசேனா, தேசியவாத காங்கிரசு, காங்கிரசு) மற்றும் அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்றார்.

சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக், மாநில அரசு இசுலாமியர்க்கு கல்வியில் 5 சதவீத ஒதுக்கீடு அளிக்க முன்வர வேண்டுமென மேலவையில் கோரிக்கை விடுத்த சில நாட்களில், தாக்கரே “இசுலாமியர்க்கான இட ஒதுக்கீடு தொடர்பாக எவ்விதக் கோரிக்கையும் மகாராஷ்ட்ர அரசிடம் முன்வைக்கப்படவில்லை” என தம் கருத்தை வெளியிட்டார்.

ஏற்கனவே மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே  “இசுலாமியர்க்கு 5 சதவீத ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக எவ்விதக் கோரிக்கையும் அரசிடம் தற்போது வரை வைக்கப்படவில்லை” என்று  தெரிவித்த பின்னர், காங்கிரசுத் தலைவர் தொரட் இந்த தகவலை கூறியுள்ளார்.

More articles

Latest article