கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்,
தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
சமீபத்திய தகவல்களின் படி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் 24,218 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தமிழகம் உட்பட நான்கு மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் களம் இறங்கினார். இவர் சென்ற முறை வசந்தகுமாரிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.