டில்லி
தலைமை நீதிபதி மீது எழுந்துள்ள புகார் சர்ச்சைகள் தீரும் வரை அவர் எந்த வழக்கையும் விசாரிக்க வேண்டாம் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் நால்வர் வரலாற்றில் முதல் முறையாக செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினர். அப்போது அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தினர். அதன் பிறகு அந்த விவகாரம் சமாதானப் படுத்தப் பட்டு அடங்கிப் போயிற்று. காங்கிரஸ் கட்சி இது குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சர்ச்சையை கிளப்பியது.
மேலும் புகாருக்குள்ளான தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்னும் ஒரு மனுவை பல எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி துணை ஜனாதிபதியிடம் அளித்துள்ளது. அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட துணை ஜனாதிபதி இது குறித்து எந்த விவரமும் அளிக்கவில்லை. அந்த மனுவில் தீபக் மிஸ்ரா மீது ஐந்து குற்றங்கள் சாட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தீபக் மிஸ்ரா மீது புகார்கள் கூறப்பட்டதால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. நாங்கள் அவருக்கு சில கோரிக்கைகள் விடுக்கிறோம். அவரைக் குறித்த சர்ச்சைகள் ஒரு முடிவுக்கு வரும்வரை அவர் எந்த வழக்கையும் விசாரிக்க வேண்டாம். பாஜகவின் ஆளுமையில் இருந்து அவர் வெளியே வர வேண்டும். நிதித்துறையை அரசியல் ஆக்க வேண்டாம் என பாஜகவுக்கு தெரிவிக வேண்டும்.
ஆங்கிலத்தில் சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள் என சொல்வது போல் தலமை நீதிபதியும் நடந்துக் கொள்ள வேண்டும். மற்றதை நாங்கள் அவருடைய மனசாட்சிக்கு விட்டு விடுகிறோம். அவருடைய நடவடிக்கைகள் நிழல் தன்மையுடன் இருக்குமானால் அவர் தான் அந்த நிழலைவிட்டு வெளியே வரவேண்டும். அவர் மீதே புகார் உள்ள போது மற்றவர்கள் மீதான புகாரை அவர் எவ்வாறு விசாரிக்க முடியும்?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளார் ரந்தீப் சுர்ஜி வாலா தெரிவித்துள்ளார்.