ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், ஜே.எம்.எம். கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தற்போது பாரதீய ஜனதா கட்சி ஆட்சிசெய்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 14 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணியமைத்துப் போட்டியிடுகிறது.
இக்கூட்டணியில், காங்கிரசோடு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இக்கட்சிகளிடைய நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடந்துவந்தது. தற்போது முடிவு எட்டப்பட்டு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை;
காங்கிரஸ் (7 தொகுதிகள்) – ராஞ்சி, தன்பாத், சத்ரா, லோகர்தகா, குன்த்தி, ஹசாரிபாக் மற்றும் செய்பாஸா.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (4 தொகுதிகள்) – தும்கா, ராஜ்மஹால், கிரிதி மற்றும் ஜாம்ஷெட்பூர்.
ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (2 தொகுதிகள்) – கோட்டா, கோதெர்மா.
ராஷ்ட்ரிய ஜனதாதளம் (1 தொகுதி) – பலமு
– மதுரை மாயாண்டி