தார்வாட்

ர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

அடுத்த அண்டு கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளன  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா லிங்காயத்து மடத்துக்கு சென்று ஆசி பெற்றுள்ளார்.

தற்போது கர்நாடக காங்கிரஸ் கட்சியில் முதல்வர் வேட்பாளராக சித்தராமையா மற்றும் டி கே சிவகுமார் ஆகிய இருவரும்  விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்தன.  இந்நிலையில் நேற்று தார்வாடில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது..  இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

ராகுல் காந்தி கூட்டத்தில்,

“கர்நாடகாவில் அடுத்த ஆண்டு மே மாதம் கர்நாடகாவில் தேர்தல் நடைபெற இருக்கிறது.  இந்த் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 150 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும். நாம் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வேண்டும்.  மேலு, காங்கிரஸ் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி பணி மேற்கொள்ள வேண்டும்.

அவர்கள் பாஜக அரசின் ஊழல், சட்ட விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்த வேண்டும். உள்கட்சி விவகாரங்களைப் பொதுவெளியிலும், ஊடகங்களிலும் விவாதிக்கக்கூடாது. கருத்து பேதங்களை மறந்து முக்கிய நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். யாரும் முதல்வர் வேட்பாளர் குறித்துப் பேச வேண்டாம் ”

என உரையாற்றி உள்ளார்.