சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு, அந்த வழக்கில் ஏற்பட்ட சர்ச்சையால் சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுஷாந்த் சிங் இருந்த வீடு, தங்கிய இடங்கள், காதலி ரியா, ரியாவின் சகோதரர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
போதை மருந்துகள் ஏதேனும் பின்னணியில் உள்ளனவா என்ற ரீதியில் போதை மருந்து தடுப்புப் பிரிவினர், விசாரணையைத் தொடங்கினர்.
அதில் ரியா சக்ரபர்த்தியின் சகோதரர் ஷெளவிக் மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் இல்லத்தின் மேலாளர் சாமுயல்மிராண்டா இருவரையும் கைது செய்ததாக போதை மருந்து தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.
ஷோயிக் மற்றும் மிராண்டா இருவரும் ராஜ்புத்தின் மரண வழக்கில் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் (என்.டி.பி.எஸ்) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் முதல்முறையாக மனம் திறந்த இந்திரஜித் சக்ரவர்த்தி, “வாழ்த்துக்கள் இந்தியா. நீங்கள் என் மகனை கைது செய்துள்ளீர்கள். என் மகள் அடுத்த வரிசையில் இருப்பதை நான் நம்புகிறேன். நீங்கள் ஒரு நடுத்தர குடும்பத்தை திறம்பட இடித்துவிட்டீர்கள். ஆஃப்கோர்ஸ், நீதிக்காக எல்லாம் நியாயமானது. ஜெய் ஹிந்த்.” என அவர் தனது 24 வயது மகனை கைது செய்ததை கண்டித்து ஒரு அறிக்கையில் கூறினார்.