சிட்னி:
ஸ்திரேலியாவில் நடைபெற்ற புத்தாண்டு இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 80 பேர் காயமடைந்துள்ள னர்.

ஆஸ்திரேலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள விக்டோரியா மாநிலத்தில் உள்ள லோர்னே நகரின் கிராண்ட் கலையரங்கத்தில் புத்தாண்டையொட்டி, இசை மற்றும் கண்ணை கவரும் கலைவிழா நிகழ்ச்சிகள் நேற்றிரவு நடைபெற்றன.

இவ்விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் திரளாக கூடியிருந்தனர். முதலில் ஆஸ்திரேலியாவின் பிரபல இசைக்குழுவினரின் நிகழ்ச்சி  நடைபெற்றது.

தொடர்ந்து, அருகாமையில் உள்ள மற்றொரு மேடையில் பிரிட்டன் நாட்டின் மிகப்பிரபலமான ‘லண்டன் கிரம்மர்’ குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது.


அப்போது பொதுமக்கள் ஆர்வம் காரணமாக மேடையை நோக்கி சென்றனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளி னால் பலர் கீழே விழுந்தனர்.

கீழே விழுந்தவர்கள் அலறல் சத்தம், அங்கு இசைக்கப் பட்ட இசை சத்தத்தால் குழுமியிருந்தவர்களுக்கு கேட்க வில்லை. இதன் காரணமாக கீழே விழுந்தவர்கள் மீது சிலர் ஏறிச்சென்று மேடையை நெருங்க முந்தியடித்து சென்றனர்.

இதில் சிக்கிய பலர் எலும்புமுறிவுக்கு ஆளாகினர். பலருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக கூச்சல், குழப்பம் ஏற்பட்டு கலவரம் ஏற்படும் சூழல் உருவாகியது.

மீட்புப் படையினர் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்து, மிதிபட்டு மயங்கிய நிலையில் கிடந்த சிலரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் காரணமாக அங்கு நடைபெற்ற புத்தாண்டு இசை நிகழ்ச்சி, சோக நிகழ்ச்சியாக முடிந்தது.