சென்னை:

கராஷ்டிராவில் சிவசனா ஆட்சியமைக்க காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆதரவு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அங்கு, காங், என்சிபி, சிவசேனா கூட்டணி ஆட்சி உருவாகும்  வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சோனியா காந்தியை சந்தித்து பேசிய நிலையில், இன்று சோனியா காந்தி ஆதரவு தர ஒப்புதல் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநில  சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், பாஜக சிவசேனா கூட்டணி முறிந்ததாலும், அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வந்தது. அதன்படி, என்சிபி, காங்கிரஸ் ஆதரவை பெற முயற்சி மேற்கொண்டு வந்தது. இது தொடர்பாக  3கட்சிகள் இடையே  குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று என்சிபி தலைவர் தலைவர் சரத்பவார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில சிவசேனா ஆட்சி அமைக்க சோனியா காந்தி ஆதரவி தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக சரத்பவார் இன்று, பிரதமர் மோடியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.