டெல்லி:

லைநகர்  டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சொசைட்டி குழுவில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை நீக்கி மோடி தலைமையிலான பாஜக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.  இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் புது தில்லியில் உள்ள தீன்மூர்த்தி பவனத்தில் அமைந்தி ருக்கிறது. நாட்டின் முதல் பிரதமரான  ஜவாஹர்லால் நேரு மறையும் வரை சுமார்  16 ஆண்டுகள் தீன்மூர்த்தி பவனத்தில்தான் வசித்து வந்தார்.

இந்த தீன்மூர்த்தி பவன் தற்போது  மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், டாக்டர் கரண் சிங் தலைமையிலான நிர்வாகக் குழுவின் மேற்பார்வையில் செயல்படுகிறது. இங்குள்ள அருங்காட்சியகத்தில்  பண்டித ஜவாஹர்லால் நேருவின் பல்வேறு வெளிநாட்டுப் பயணங்களின்போது அவருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், அவரது தனிச் சேகரிப்பில் இருந்த புத்தகங்கள், அவருடைய அன்றாட உபயோகப் பொருள்கள் ஆகியவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

இந்த தீர்மூர்த்தி  பவனத்தை பண்டித நேருவுக்கு மட்டுமே உரித்தான தனி நினைவகமாக இல்லாமல், இந்தியா வின் அனைத்து முன்ளாள், இந்நாள், வருங்காலப் பிரதமர்களின் நினைவைப் போற்றும் அருங்காட்சியகமாக மாற்ற மோடி தலைமையிலான மத்தியஅரசு முடிவு செய்துள்ளது இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நேரு நினைவு அருங்காட்சியக குழு தலைவராக  பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் துணைத்தலைவராகவும் உள்ளனர். இந்த குழுவை மத்திய அரசு மாற்றி அமைத்து உள்ளது.

ஏற்கனவே உறுப்பினராக இருந்த காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், கரன்சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக டி.வி. செய்தியாளர் ரஜத் சர்மா, விளம்பரதாரர் பிரசூன் ஜோஷி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

மத்திய அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.