டில்லி,
குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் விதி மீறல் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதற்கு ராகுல் பதில் தெரிவித்ததை தொடர்ந்து நோட்டீசை திரும்ப பெற்றது தேர்தல் ஆணையம்.
குஜராத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அங்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுவதற்க முந்தைய நாள், ஏற்கனவே குஜராத் தேர்தல் பற்றி ராகுல் காந்தி அளித்த பேட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. அதையடுத்து, ராகுலின் பேட்டியை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது. அதுகுறித்து எப்ஐஆர் பதியும்படியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதுகுறித்து வரும்வி 18ந்தேதிக்குள் விளக்கம் அளிக்க கோரி ராகுலுக்கு நோட்டீசும் அனுப்பியது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பிய நோட்டீஸை தேர்தல் ஆணையம் நேற்று இரவு திரும்பப் பெற்றது.