பனாஜி: 
முத்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று  காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில்  பேசிய காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, கடந்த செப்டம்பர் 15 அன்று உளவுத்துறை குஜராத்தின் முத்ரா துறைமுகத்திலிருந்து சுமார் 3,000 கிலோ ஹெராயினை செலிகம் டால்கம் பவுடர் என்று முத்திரை குத்தியது.
சர்வதேசச் சந்தையில் இந்த கடத்தல் பொருளின் மதிப்பு ரூ. 21,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குக் கடத்தப்பட்டது.
இது போன்ற கடத்தல்,  அரசியல் ஆதரவு இல்லாமல் நுழைவது சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,  முத்ரா துறைமுகத்தில் இது குறித்து  ஏன் விசாரிக்கப்படவில்லை என்றும் முகமது கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் துறைமுக உரிமையாளருடனான நெருக்கம் காரணமாகவா,  எந்த விசாரணையும் நடத்தப்பட வில்லை  என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.