
சட்டப்பேரவைத் தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணத்தை கல்விக்கு பயன்படுத்த வேண்டும் என நடிகர் விஷால் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இந்த சமயத்தில் வாக்காளர்களுக்கு அளிக்க அரசியல் கட்சிகள் கடத்திய, பதுக்கிய பல கோடி ரூபாய் பணத்தை தேர்தல் ஆணையம் கைப்பற்றியது.
இது குறித்து நடிகர் விஷால் கூறியதாவது:
“தேர்தல் என்பது சாதாரண விஷயம் அல்ல. அடுத்த ஐந்து வருடங்களுக்கு நம்மை யார் ஆள்வது என்பதை முடிவு செய்யும் முக்கிய விஷயம் இது.
இத்தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு கோடிக்கணக்கான பணத்தை தேர்தல் ஆணையம் கைப்பற்றி இருக்கிறது. தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி அவர்களுக்கு நன்றி.
கைப்பற்றப்பட்ட பணத்தை மீண்டும் மக்களுக்கே செலவிட வேண்டும். அதுவும் அதுவும் கல்விக்காக பயன்படுத்த கொடுத்தால் சிறப்பாக இருக்கும்” என்று ஆலோசனை தெரிவித்துள்ளார் விஷால்.
Patrikai.com official YouTube Channel