டெல்லி: மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு நடப்பு ஆண்டு முதல் வருடத்திற்கு 2முறை நடத்த மத்தியஅரசு முடிவு சேய்துள்ள தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே ஜெஇஇ தேர்வு இரு முறை நடத்தப்பட்டு வரும் நிலையில், அதுபோலவே நீட் தேர்வையும் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவபடிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், நீட் எனப்படும் தகுதித்தேர்வை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இருந்தாலும், அதை மத்தியஅரசு செவிமடுக்காமல் இருந்து வருகிறது.  இதனால், நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணாக்கர்கள் கடுமையான மன அழுத்ததுக்கு ஆளாகி வருகின்றனர். பலர் தற்கொலை முடிவையும் நாடி வருகின்றனர்.

இதையடுத்து,   மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ நுழைவு தேர்வா,ன நீட் தேர்வையும் ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது என்று தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர. இந்த புதிய நடைமுறை நடப்பாண்டே செயல்பாட்டுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி,  2 நீட் தேர்வுகளை எழுதும் மாணாக்கர்கள், எதில்  அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதைக் கொண்டு மருத்துவ படிப்பில் சேரலாம். நடப்பாண்டுக்கான நீட் தேர்வு குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்களை    தேசிய தேர்வுகள் முகமை விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது.

மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்றவற்றில் சேர்ந்து படிக்க ஜே.இ.இ. என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த தேர்வை   4 முறையாக மாற்றவும் திட்டமிட்டு இருப்பதாக மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.