டில்லி
வரும் செப்டம்பர் மாதம் பக்ரீத் அன்று பலி கொடுக்க ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு கண்டிஷன் விதித்துள்ளன.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் வரும் செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த நாளில் பலி கொடுப்பது முக்கிய நிகழ்வாகும். ஆனால் சமீபத்திய மிருகவதை தடை சட்டப்படி மிருகங்களை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெட்ட முடியும். மற்ற இடங்களில் வெட்டுவதை இந்த சட்டம் தடை செய்துள்ளது. இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் பலி கொடுக்க அரசின் அனுமதியை நாடி உள்ளனர். மத்திய அரசு விசேஷ சலுகைகள் கொடுப்பது மாநில அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம் என கூறிவிட்டது.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதிமுறைகள் வைத்துள்ளன. இது வரை மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கான தங்கள் மாநிலத்தின் வழிமுறைகளை தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிராவில் தனது விசேஷ அதிகாரத்தை பயன்படுத்தி வீடுகளில் பலி கொடுக்க ஆன் லைன் மூலம் அனுமதி வழங்க அரசு முன் வந்துள்ளது. ஆன்லைனில் குடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை அனுப்ப வேண்டும். அனுமதி ஆன்லைனில் அனுப்பப்படும் இதற்காக மொபைல் செயலி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் உச்சநீதி மன்ற உத்தரவை காரணம் காட்டி வீடுகளில் பலி கொடுக்கத் தடை இல்லை என அறிவித்துள்ளது. இந்த தடை பண்டிகை அன்று இஸ்லாமியர்கள் பலி கொடுக்க மட்டுமே தளர்த்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.
இதை தொடர்ந்து மேலும் பல மாநிலங்கள் பக்ரீத் பலிக்கு ஒப்புக் கொள்ளும் என தெரிய வருகிறது.