கரூர்
நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16-ம் தேதி நிலமோசடி வழக்கு மற்றும் கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கேரளாவில் சிபிசிஐடி மற்றும் வாங்கல் காவல்துறையினர் கைது செய்தனர்
அவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த இருவழக்குகளிலும் ஜாமீன் கேட்டு கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுதாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
கரூர் நீதிமன்றம் இந்த இரு வழக்குகளிலும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறு உத்தரவு வரும் வரை சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்னும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. மேலும் இதே வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜுக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
[youtube-feed feed=1]