ஸ்ரீநகர்
இன்று காஷ்மீர் சட்டசபையில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 23-ந் தேதி முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் மந்திரி சபைக் கூட்டம் நடைபெற்றது. மேலும், சிறப்பு சட்டசபையைக் கூட்டுவதற்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு, துணை நிலை ஆள்ர் மனோஜ் சின்ஹாவுக்குப் பரிந்துரைத்தது.
இன்று சட்டசபை சிறப்புக்கூட்டம் கூடியது. சபை கூடியதும், பஹல்காம் படுகொலைகள் தொடர்பாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானம் மீது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
பிரகு பஹல்காம் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம், ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. , ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், அவை உறுப்பினர்கள் ஏப்.22-ம் தேதி பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.