போபால்:

டைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்த மத்திய பிரதேச அரசு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கம்ப்யூட்டர் பாபா உள்பட 5 இந்து மத தலைவர்களுக்கு அரசு பதவி வழங்கி உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்துத்துவா அமைப்புகளின் ஆதரவில் பெற்ற வெற்றிக்காகவும், அடுத்து வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும், பொதுமக்களின் வாக்கு வங்கியை பெற பாஜகவின் முயற்சிதான் இந்த பதவி  என்று காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மத்தியபிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக மாநில அரசு ஆட்சி செய்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் பாயும் நர்மதா நதியை சுத்தப்படுத்த ஏற்கனவே மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நர்மதா நதி பாதுகாப்பு அமைப்புக்கு மாநிலத்தில் உள்ள  5 இந்து அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அந்த அமைப்புகளின் தலைவர்களை நதி பாதுகாப்பு கமிட்டி தலைவர்களாக  அந்தஸ்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த பதவியானது அமைச்சர்களுக்கான அதிகாரம் படைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கான உத்தரவு கடந்த மார்ச் 31ந்தேதி வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொது நிர்வாக துறை கூடுதல் செயலாளர் கே.கே.கதியா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி மாநிலத்தில் உள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களான கம்ப்யூட்டர் பாபா, நர்மதனாந்த் மகாராஜ், ஹரிகரானந்த் மகராஜ், , பாயு மகராஜ், பண்டிட் யோகேந்திர மகந்த். ஆகிய 5 பேர்களையும் நர்மதா நதி பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த  “காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி கூறியதாவது,

ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் செயல்பட்டு வந்ததற்காகவும்,  அடுத்த ஆண்டு  வர உள்ள பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, இந்துத்துவா அமைப்புகளின் தலைவர் களுக்கு  இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், சமுதாயத்தில் அவர்களுக்கு உள்ள மரியாதையை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், மாநில அரசின் இந்த நியமனம் விந்தையாக இருப்பதாகவும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது பாவங்களை கழுவ இதுபோன்ற பதவிகள் கொடுத்து  வருவதாகவும் கூறினார்.

இவர்களை நியமனம் செய்துள்ளது காரணமாக, மாநில அரசு நர்மதா நதியின் பாதுகாப்பை  புறக்கணித்துள்ள தாகவும், ஏற்கனவே இந்த புனிதர்கள் நர்மதா நதிக்கரையில் 6 கோடி மரங்களை நட்டி புனிதப்படுத்தப்போவதாக கூறியிருந்தார்கள். அது என்ன ஆனது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

காங்கிரசின் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த, மத்திய பிரதேச  மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜ்னிஷ் அகர்வால், எதிர்க்கட்சித் தலைவர் புனிதர்களுடன் உள்ள  தொடர்புடைய எதையும் வெறுக்கவில்லை என்றும், “சுற்றுச்சூழல் மற்றும் நதி பாதுகாப்பு ஆகியவற்றை எளிதாக்கும் வகையில் அவர்கள் நியமித்து மாநில அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது என்றும் கூறினார்.

நர்மதா பாதுகாப்புப் பணியில்  பொதுமக்கள் பங்களிப்பு செய்வதற்காகவே, இந்து அமைப்புகளின் தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அதற்கான பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.