டில்லி,
பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்றோடு நிறைவு பெற்றது. அதையடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல்கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி முடிவடைந்தது.
அதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. சுமார் 1 மாத காலம் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்று கடைசி நாள் கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க கோரப்பட்டது. ஆனால், சபாநயாகர் அதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.
மக்களவையில் பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இந்த கூட்டத்தொடரில் அமளி காரணமாக 8 மணி நேரம் 12 நிமிடங்கள் அவையின் நடவடிக்கை கள் வீணாணது என்றும், வழக்கமானதைவிட கூடுதலாக 48 மணி நேரம் சபை நடைபெற்றது என்றும் கூறினார்.
அதேபோல், மாநிலங்களவையில் சுமார் 136 மணி நேரதிதில் 14 மசோதாக்கள் விவாதிக்கப்பட்ட தாக சபாநாயகர் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்தில், டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் பிரச்சினை குறித்து விவதாதிக்க கோரப்பட்டது. ஆனால், சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்துவிட்டார்.
ஆனால், மம்தா பானர்ஜியின் தலையை வெட்டி கொண்டு வந்தால் ரூ.11 லட்சம் பரிசு என்று கூறிய யுவ மோர்சா அமைப்பு தலைவர் கூறிய விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.