புனே: புனேயில் வரும் 13ம் தேதி முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில். கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
அதை தொடர்ந்து தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. மகாராஷ்டிராவில் மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று அதிகம் காணப்படுகிறது.
மகாராஷ்டிராவில் ஊரடங்கு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினரும் அதிகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந் நிலையில், புனே, பிம்ப்ரி சின்ச்வாட் மற்றும் கிராமப்புறத்தின் சில பகுதிகளில் வரும் 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
புனேவில் 22 கிராமங்களில் அதிகளவு கொரோனா தொற்றுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அந்த கிராமங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும். பால் மற்றும் மருத்துவ கடைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.