சென்னை: சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வரும் சுங்கத்துறை அதிகாரிகள் மீது ஏராளமான முறைகேடு தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், 43 சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் அதிக அளவிலான தங்கம், போதைப்பொருட்கள் கடத்தல் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. அதுபோல கடத்தல்காரர்களிடம் இணைந்து சுங்கத்துறை அதிகாரிகள் செயல்படுவதாகவும், முறையாக வரி கட்டி கொண்டு வரும் விமான பயணிகளிடமும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுத்துவதாகவும் ஏராளமான புகார்கள் வந்துள்ளது. இதுதொடர்பான வழக்குளும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த 8 சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட 43 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்ததால், இடம் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்களில், 30 பேர் உதவி ஆணையர்கள், 13 பேர் துணை ஆணையர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலர் துறைமுகத்துக்கும், கார்கோ பகுதிகளுக்கும், அங்கு பணியாற்றிவர்கள் மற்ற பகுதிகளுக்கும் என பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.