அம்பாசமுத்திரம்
துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் சர்ச்சைக்குரிய முறையில் உரையாற்றியதாக ஆடிட்டர் குருமூர்த்தி மீது அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா ஜனவரி 14 ஆம் தேதி அன்று ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடப்பது வழக்கமாகும். இந்த விழாவில் முந்தைய துக்ளக் ஆசிரியர் சோ சிறப்புரையாற்றுவார். சோவின் மறைவுக்குப் பிறகு துக்ளக் ஆசிரியராகப் பணி புரியும் ஆடிட்டர் குருமூர்த்தி சிறப்புரை ஆற்றி வருகிறார்.
இந்த வருடம் ஜனவரி 14 ஆம் தேதி அன்று துக்ளக் ஆண்டு விழா நடந்தது. அதில் அந்த பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி உள்ளார். அவர் தனது உரையில் நீதிபதிகள் நியமனம் குறித்தும் நீதிபதிகள் குறித்தும் இழிவாகப் பேசியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் குறித்தும் நீதிபதிகள் நியமனம் குறித்தும் இழிவாகப் பேசியதால் ஆடிட்டர் குருமூர்த்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சேரன் மாதேவி காவல்நிலையத்தில் 6 வழக்கறிஞர்கள் இந்த புகாரை அளித்துள்ளனர்..