கடந்த 2020ஆம் ஆண்டு ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘திரௌபதி’ திரைப்படம் வெளியானது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘திரௌபதி’ கூட்டணி ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

கடந்த மாதம் 24ஆம் தேதி படத்தின் ட்ரைலரை வெளியிட்டது படக்குழு.

‘ருத்ரதாண்டவம்’ பட ட்ரைலரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கிறிஸ்தவர்களை அச்சுறுத்தும்படியாகவும், மதக் கலவரத்தைத் தூண்டும்படியாகவும் உள்ளதால் இப்படத்தைத் தடை செய்து, இயக்குநர் மோகன் ஜியைக் கைது செய்ய வேண்டும் என சிறுபான்மை மக்கள் நல கட்சி சார்பில் பேராயர் சாம் ஏசுதாஸ் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இயக்குநர் மோகன் ஜியைக் கைது செய்ய வேண்டும் என டி.ஜி.பி அலுவலகத்தில் சிறுபான்மை மக்கள் நல கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். வில்லனாக இயக்குநர் கெளதம் மேனன் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளராக ஃபரூக், இசையமைப்பாளராக ஜூபின் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ‘திரெளபதி’ படத்தைத் தயாரித்த ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார்.