டில்லி:
இந்திய ரயில்வே நிர்வாகம் அம்பேத்கரை இழிவு படுத்திவிட்டதாக புகார் எழுந்திருக்கிறது.
இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் சுகாதாரம் குறித்த விளம்பரப் பலகைகள் நாடு முழுதும் வைக்கப்பட்டு வருகின்றன.
இதில் ஒரு விளம்பத்தில் இருக்கும் ஓவியம், அம்பேத்கர் போன்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் மீது கண்டனங்கள் குவிந்துவருகின்றன.
சமூகவலைதளங்களிலும் ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
சிலர், “மத்திய பாஜக அரசுதான் வேண்டுமென்றே அம்பேத்கர் படத்தை, துப்புரவு விளம்பரத்தில் பயன்படுத்தி இருக்கிறது” என்றும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.