சென்னை,

மிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நடிகர் கமலஹாசனை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தினார். அதையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நடிகர் கமல், தமிழக மக்களுக்காக முதல்வராக ஆசைப்படுகிறேன் என்றும், 100 நாட்களுக்குள் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 100 நாட்களுக்குள் தேர்தல் வந்தால் தான் தனித்து போட்டியிடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்யும் அரசு கட்டாய கல்யாணம் போன்றது. இதை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள் என்றும்,. தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குறித்து, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பலமுறை தனது அரசியல் குறித்து விவாதித்திருக்கிறேன் என்றார்.

மேலும், நாங்கள் இருவரும்  தேர்ந்தெடுத்திருக்கும் பாதை வேறு. இருந்தாலும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதில்லை என்று முடிவெடுத்துளோம் என்றும் கூறினார்.

தற்போதைய சூழலில்  தனியாக போட்டியிட்டால் வெற்றிபெறுவது கடினம் என்றாலும், அது முன்பு நடந்திருப்பதாகவும்  அதை விரும்புகிறேன் என்றும் கூறி உள்ளார்.