சென்னை: வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான இழப்பீடு தொகை ரூ.12லட்சமாக அதிகரித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தண்டனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் ஆங்காங்கே பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு தமிழ்நாட்டில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. இந்த இழப்பீட்டு தொகை ரூ.12 லட்சமாக உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
தலைமைச்செயலகத்தில் இன்று மாலை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்ஆதிதிராவிடர் நலத் துறை மாநில விழிப்புணர்வு & கண்காணிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.128 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனத்தில் ரூ.40 கோடி செலவில் மாணவர் விடுதி கட்டப்படும் எனவும் அறிவித்துள்ளார்.