டில்லி
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நடைபெற்றுள்ள கொரோனா சோதனை, நோயாளிகள் மற்றும் மரணம் அடைந்தோர் குறித்த ஒரு கண்ணோட்டம் இதோ
நேற்று வரை தமிழகத்தில் 1,88,241 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. இதனால் இம்மாநிலத்தில் அதிக அளவில் நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர் தமிழகத்தில் பரிசோதனை தாமதமாகத் தொடங்கிய போதிலும் அதிக அளவில் சோதிக்கப்பட்டுப் பாதிப்பு அடைந்தோரைத் தனிமைப்படுத்தும் பணியில் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
கொரோனா சோதனையில் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம்,பஞ்சாப் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஒரிசா, கர்நாடகா, ஜார்காண்ட்,ஆந்திரா, அரியானா மற்றும் கேரளாவில் நடந்த ப்ரிசோத்னைகளில் அதிகம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை.
தற்போதைய நிலையில் மேற்கு வங்கம், தெலுங்கானா, பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் அதிகம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளதால் இங்கு கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.
தமிழகத்தில் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாநிலத்தில் குஜராத் முதல் இடத்திலும் கர்நாடகா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
குணமடைந்தோர் விகிதம் கேரளாவில் அதிகமாகவும் பஞ்சாபில் குறைவாகவும் உள்ளது