திருவனந்தபுரம்: கேரளாவின் 2 கடற்கரை கிராமங்களில், கொரோனா தொற்று, சமூகப் பரவல் நிலையை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.
மாநில தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு அருகேயுள்ள புல்லுவிலா மற்றும் பூந்துரா ஆகிய கிராமங்கள்தான் அவ்வாறு உறுதிசெய்யப்பட்டவை.
கடந்த 24 மணிநேர காலக்கட்டத்தில், கேரளாவில் 791 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட, 133 பேர் குணமடைந்த மற்றும் ஒருவர் மரணமடைந்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.,
ஜூலை 17 வரையான நிலவரப்படி, அம்மாநிலத்தில் மொத்தம் 11066 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 6029 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
 

[youtube-feed feed=1]