டில்லி

செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று சசி தரூர் தலைமையில் ஆன நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக முகநூல் நிர்வாகிகளுக்குச் சம்மன் அனுப்பி உள்ளது

கடந்த 14 ஆம் தேதி அன்று அமெரிக்க நாட்டை சேர்ந்த வால்ஸ்டிரீட் ஜர்னல் நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் ஆளும் கட்சியான பாஜக குறித்து புகார் எழுப்பப்பட்டிருந்தது.  அந்த செய்தியில் ஆளும் பாஜக கட்சியினர் மற்றும் வலது சாரி அமைப்பினர் சிலரின் வெறுப்புப் பேச்சுக்களைத் தடை செய்வதில்லை எனக் குறை கூறி இருந்தது.  மேலும்  இந்திய முகநூல் நிர்வாகி அன்கிதாஸ் இதற்குப் பின்னணியில்  உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதையொட்டி முகநூல் நிர்வாகத்துக்கு, நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிலைக்குழு உறுப்பினரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிதருர் சம்மன் அனுப்பவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.  பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.   இவ்விரு உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உரிமை மீறல் பிரச்சினை ஆகி உள்ளது.,

இதன் இடையே வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு முன்பு முகநூல் நிர்வாகிகள் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  அந்த சம்மனில் இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு சமூக மற்றும் ஆன்லைன் செய்தி ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துதல், உள்ளிடவை குறித்து அன்று விவாதிக்க உள்ளதாக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுவரை முகநூல் நிறுவனம் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.