திஸ்புர்: மாநிலத்தில் சிஏஏ கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என அஸ்ஸாமில் போட்டியிடும் பாஜக தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் சிஏஏ சட்டத்துக்கு எதிரான போராட்டம் காரணமாக, அந்த சட்டத்தை அமல்படுத்துவது உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும், பாரதியஜனதா கட்சியின் வடகிழக்கு மாநிலங்களில் ஒருங்கிணைப்பு தலைவரான ஹிமந்தா பிஸ்வா சர்மாவை சிஏஏ சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளார்.
சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மேற்குவங்கம் உள்பட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் மாநிலங்கள் அறிவித்துள்ள நிலையில், தற்போது தேர்தல் நடைபெற உள்ள தமிழகமும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தப்பட்டோம் என்று கூறி உள்ளது. இந்த நிலையில், அஸ்ஸாமில் போட்டியிடும் பாஜக தலைவர் சிஏஏ சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் தல்வர் சர்பானந்த சோனோவால் தற்போது பாஜகஆட்சி நடைபெற்று வருகிறது. 126 தொகுதிகளைக் கொண்ட அங்கு 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு மார்ச் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இதையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பாஜக தலைமையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் தற்போதைய முதல்வர் சர்பானந்த சோனோவால் பெயர் இடம்பெற வில்லை. ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் ஒருங்கிணைப்பு தலைவராக உள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மாவை பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் முதல்வர் வேட்பாளர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய ஹிமந்தா பிஸ்வா மீண்டும் சிஏஏ கொண்டு வரப்படும் என கூறியுள்ளார். அந்த சட்டத்தில் என்ன தவறு உள்ளது என எதிர்கேள்வி எழுப்பி உள்ளார். பாஜக தலைமை 5 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சிஏஏ குறித்து மவுனம் சாதித்து வரும் நிலையில், ஹிமந்தா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் காங்கிரஸ் தலைவரான ஹிமந்தா பிஸ்வா கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜக.வில் சேர்ந்தார். பின்னர் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. வடகிழக்கு மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார்.