சென்னை:

சென்னையில் கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட சுமார்  202 டன் திடக்கழிவுகள் பாதுகாப்பாக எரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  தெரிவித்து உள்ளார்.

மிழகத்தில், கொரோனா தடுப்பு முகாம்கள், வார்டுகளில் இருந்து 4.90 லட்சம் கிலோ மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு உள்ளோர் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  மார்ச் மாதம் முதல் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள குவான்டைன் பகுதிகளில் இருந்து பெறப்பட்ட சுமார் 202 டன் தினக்கழிவுகள் பாதுகாப்பாக எரிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனிமை முகாம்கள், ஆய்வகங்களில் இருந்து 4.90 லட்சம் கிலோ மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், அவைகள் அனைத்தும்,  1,200 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் எரியூட்டப்பட்டு சாம்பலாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது.