சென்னை:  தமிழ்நாட்டில்  வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.30 அதிகரித்து ள்ளது. இதன் காரணமாக, சென்னையில்  வணிக சிலிண்டர் விலை ரூ.1,929க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதமும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில்,  இந்த மாதமும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு  விலை  கச்சா எண்ணை நிலவரத்தைத் தொடர்ந்து, மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது.  அதன்படி, மார்ச் 1ந்தேதி அன்ற வர்த்தக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளில் உபயோகப்படுத்தும் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படவில்லை.

நேற்று அதிகாலை வெளியான நடப்பு மாதத்திற்கான (மார்ச்) விலை பட்டியலில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், அதே விலையில் நீடிக்க செய்துள்ளனர்.

அதன்படி,  19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை, ரூ.28 முதல் ரூ.31 வரை அதிகரிக்கப்பட்டது. சென்னையில் கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,899.50 என இருந்தநிலையில், ரூ.29.50 அதிகரித்துள்ளது.

டெல்லியில் ரூ.28 அதிகரித்து ரூ.1,768.50 ஆகவும், மும்பையில் ரூ.28.50 அதிகரித்து ரூ.1,720.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.31 அதிகரித்து ரூ.1,875.50 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.190 அதிகரித்துள்ளது.

 

[youtube-feed feed=1]