சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் சிலிண்டருக்கு ரூ.57.50 பைசா குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு  இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்கின்றன.  எண்ணை நிறுவனங்களான பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் மற்றும் தனியார் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்கள் , ஒவ்வொரு மாதம் முதல் நாளன்று சிலிண்டர் விலையை ஏற்றி இறக்கி வருகின்றனர்.

அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள்  ஜூலை மாதம் சிலிண்டர் விலை நிலவரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் ரூ.1881க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டர் விலையில் ரூ.57.50 பைசா குறைத்துள்ளத.

அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.57.5 குறைந்து ரூ.1,823.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.