சென்னை: நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மேலும் குறைக்கப்பட்டு உள்ளது.  சென்னையில்  ரூ. 31 குறைக்கப்பட்டு உள்ளது.   தொடர்ந்து 4-வது மாதமாக வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கச்சா எண்ணை விலை நிர்ணயத்திற்கு ஏற்றவாறு சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகள்  மாற்றம் காணுகின்றன.  அதன்படி சமையல் எரிவாயு விலைகளிலும் மாதந்தோறும் மாற்றங்கள் நிகழ்கின்றன.

அந்த வகையில், நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான வணிக எரிவாயு சிலிண்டரின் விலை 4வது முறையாக குறைக்கப்பட்டு உள்ளது. ரூ.31 குறைக்கப்பட்டு உள்ளது.  அதன்படி சென்னையில் புதிய விலை ரூ. 1,809.50 ஆக உளள்ளது. வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர்  விலை நேற்று வரை  1840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. . அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை, சென்னையில் 818.50 ரூபாய் ஆக  தொடர்கிறது.

வணிக பயன்பாட்டுக்கான சிலைண்டர் விரை,  நடப்பாண்டு, முதன்முறையாக, கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி  ரூ.30.50 குறைக்கப்பட்டு, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.1,930.50 என நிர்ணயம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து,  கடந்த மே மாதம் 1ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைக்கப்பட்டு, ரூ.1,911.50 ஆக குறைக்கப்பட்டது. தொடர்ந்து 3வது முறையாக கடந்த ஜுன் மாதம் 1ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.72 குறைக்கப்பட்டு, ரூ.ரூ.1,840.50 நிர்ணயிக்கப்பட்டது  இந்த நிலையில்  தற்போது 4வது முறையாக தொடர்ந்து ஜூலை மாதமும்  விலை குறைக்கப்பட்டுள்ளது.