சென்னை:
நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும், சினிமா துறையின் முன்னோடியான மறைந்த ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மனைவியுமான ஒய்.ஜி. ராஜலட்சுமி இன்று காலமானார்.

சினிமாத் துறையின் முன்னோடி ஒய்.ஜி.பார்த்தசாரதி. அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் என்ற நாடக குழுவை நடத்தி வந்தார். ஜெயலிதாவின் தாயார் சந்தியா, ஜெயலலிதா, லட்சுமியின் தாயார், லட்சுமி, சிவாஜி, ஒய்.ஜி.மகேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல கலைஞர்களை நாடகத்தில் வளர்த்து சினிமாவுக்கு தந்தவர். இவரின் மனைவி ஒய்.ஜி.ராஜலட்சுமி.
இவர் சென்னை கே.கே.நகரில் உள்ளது பத்ம சேஷாத்ரி பாலபவன் சீனியர் செகண்டரி பள்ளியை நடத்தி வருகிறார். இவர் வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.
அவரது மறைவுக்கு பத்மாஷேத்ரி பள்ளிகள் மற்றும் ஊழியர்கள் ஆழ்ந்த துக்கம் தெரிவித்து உள்ளனர்.
[youtube-feed feed=1]