டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் இரண்டு கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக பணி நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

டெல்லியில் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டம் நடைபெற்றது. அப்போதுசென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணிபுரிந்து வரும் நீதிபதி வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன் மற்றும் நீதிபதி பெரியசாமி வடமலை ஆகியோரை நிரந்தர நீதிபதியாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 3 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரைகளை மத்திய சட்டத்துறை ஆய்வு செய்து, அதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் அந்த பரிந்துரைகளை ஏற்று நீதிபதிகள் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார்.