நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள்மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக செயல்படாமல் இருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும். தொற்று அறிகுறி இருந்தால் மாணவர்கள் அனுமதிக்கக்கூடாது. கல்லூரி விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் !
மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் அவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை தற்போது தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதனை பின்பற்றியே மாணவர்கள் கல்லூரிகளில் பயில வேண்டும் என கண்டிப்பான முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
தமிழகத்தில் முகக்கவசம் அணிந்தபடியே 50% மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.
மேலும், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும்.
வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும். கல்லூரிகளில் நீச்சல் குளங்கள் போன்றவை மூடப்பட வேண்டும்.
மாணவர் விடுதியில் ஒரு அறையில் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும்.
முடிந்தவரை கல்லூரிக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் மாணவர்கள் தங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இறுதியாண்டு மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு அனுமதிக்கப்படுவர்.
கொரோனா தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.