புதுச்சேரி: மாநிலத்தில் ஜனவரி 4ம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஏற்கனவே அறிவித்த நிலையில், மாநிலங்களில் பள்ளிகள் திட்டமிட்டபடி 4ந்தேதி திறக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (6ந்தேதி) அனைத்து கல்லூரிகளிலும், அனைத்து வகுப்புகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு (2020) மார்ச் 21ந்தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதையடுத்து, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பாடம் போதித்து வருகின்றன. பின்னர், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறையை கடைபிடித்து, கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என மத்தியஅரசு அறிவித்தது. அதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரி இறுதியாண்டு மாணாக்கர்களுக்கு 2020ம் ஆண்டு டிசம்பர் முதல் பள்ளிக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், “புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் ஜனவரி 4ம் தேதி தொடங்கப்படும் என மாநிலஅமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்திருந்தார். அதன்படி, ஜனவரி 4ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. முதற்கட்டகமாக அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்பட்டன. அதாவது, ஜனவரி 18 முதல் முழுமையாக பள்ளிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று முதல் அனைத்து கல்லூரிகளிலும் இன்று முதல் திறக்கப்பட்டு உள்ளது. கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.