இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்குஅமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்து உள்பட அனைத்துப்பணிகளும் முடங்கின. இதனால் பல தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் இறுதி மற்றும் ஜூலையில், விடுபட்ட பள்ளிக் கல்லுரி தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.