அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக அந்தந்த கல்வி ஆண்டுகள் தொடங்கு முன் ஆசிரியர்கள் வீடு வீடாக விசாரணைக்கு செல்வது வழக்கம். ஆனால் தற்போது சென்னை, திருவள்ளுவர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச்சேர்ந்த தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் தங்கள் ஆசிரியர்களை அதே போல வீடுவீடாகச்சென்று கேன்வாஸ் செய்யப்பணித்துள்ளதாம்.
இவர்கள் கடந்த மே மாதம் முதல் வாரத்திலிருந்தே தினமும் கல்லூரிகளுக்கு வந்து அந்தந்த ஏரியாவிலுள்ள வீடுகளுக்குச்சென்று பிளஸ் டூ மாணவர்களை சந்தித்து வருகின்றனராம் அட்மிஷனுக்காக.
கல்லூரி விதிக்கும் டார்கெட்டை முடிப்பவர்களுக்கு மட்டுமே சம்பளம் அளிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் டெலிகாலிங் மூலமாக மாணவர்களை சேர்த்தாக வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
“90 பேர் வேலை செய்ற எங்க காலேஜ்ல 70 பேர் வரை வந்து இது மாதிரி கேன்வாஸ் பண்ணி அதுவரை 300 மாணவர்களை காலேஜ்ல சேத்திருக்கோம்.
வேலையை காப்பாத்திக்க வேற வழியில்லாம வீடு வீடா போயிட்டு தான் இருக்கோம். பல வீடுகளில் எங்கள உள்ளயே விட மாட்றாங்க. ஆனாலும் வேற வழியில்லை எங்களுக்கு” என்கிறார் சென்னையை அடுத்த ஒரு தனியார் என்ஜினியரிங் காலேஜ் புரபசர் பரிதாபமாக.
கொரோனா தொற்று ஊரடங்கினால் காலேஜ் அட்மிஷன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் இது போன்ற கடுமையான வழிகளை பின்பற்றுகின்றனர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளின் முதலாளிகள்.
– லெட்சுமி பிரியா