கல்லூரி கட்டணம் ஒரு ரூபாய் மட்டும் ..

கல்வி நிறுவனங்கள் முழுக்க முழுக்க வியாபார கேந்திரங்களாகி விட்ட நிலையில், மே. வங்க மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி ஒரு ரூபாய் மட்டும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.
அங்குள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டம் நைகாதி என்ற இடத்தில் ‘RISHI BANKIM CHANDRA ‘ என்ற கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் பல்வேறு படிப்புகளுக்கான 2400 இடங்கள் உள்ளன.
கொரோனா காரணமாக அனைத்து தரப்பினருக்கும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதால் , இந்த ஆண்டு அனைத்து படிப்புகளுக்கும் ஒரு ரூபாய் மட்டும் ‘பீஸ்’ வாங்குவது என இந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
’’கல்லூரியில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்’ எனத் தெரிவித்துள்ள கல்லூரி முதல்வர் டாக்டர் சஞ்சீப் சாஹா,’’ விண்ணப்பக் கட்டணமாக 60 ரூபாய் செலுத்த வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.
மத்திய அரசு அனுமதி அளித்த பிறகே கல்லூரி திறக்கப்படும் என்பதால், மாணவர்கள் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டவில்லை.
-பா.பாரதி.
[youtube-feed feed=1]