பாங்காக்,

தாய்லாந்தில் ஆமை ஒன்று தண்ணீரில் நீந்துவதற்கு சிரமப்பட்டது. அதை அறிந்த சமூக ஆர்வலர்கள் அந்த ஆமையை பிடித்து பிராணிகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதனைக்கு உட்படுத்தினர்.

விலங்குகள் மருத்துவர்கள், சிடி ஸ்கேன் எடுத்து பரிசோதித்தபோது, ஆமையின் வயிற்றினுள் நாணயங்கள் போன்ற உலோக பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து ஆமை பிராணிகள் நல மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  அங்கு ஆமைக்கு வயிற்றுப்பகுதியில்  அறுவை சிகிச்சை நடந்தது.

சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிசையின்போது ஆமையின் வயிற்றில் இருந்த 915 உலோக  நாணயங்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

தற்போது ஆமை நன்றாக இருப்பதாகவும், தொடர்ந்து அதன் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

அந்த ஆமையின் பெயர் ஓம்சின் பிக்கி என்ற பெண் ஆமை  என்றும் அதற்கு 25 வயதாகிறது என்றும் கூறினர்.