கோவை:
கோவையில் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி சஞ்சய் ராஜா, விசாரணையில் இருந்து தப்புவதற்காக துப்பாக்கியை வைத்து போலீசாரை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் ஆய்வாளர் கிருஷ்ணலீலா மீது குண்டு படாததால் காயமின்றி தப்பினார்.

இதனால் உடனிருந்த காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் குற்றவாளியை நோக்கி சுட்டதில், அவரின் காலில் காயம் ஏற்பட்டது; மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.